தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். விஜய்யின் இந்த அதிரடி அரசியல் வளர்ச்சி மற்றும் ஆட்சி மாற்றம், திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் விஜய்யின் வளர்ச்சியும், அவரது தற்போதைய அரசியல் வருகையும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், பாஜகவில் இருந்து விலகி புதிய தனிக்கட்சி அல்லது இயக்கம் தொடங்கத் திட்டமிட்டுள்ள அண்ணாமலையை, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மருமகனும், சௌந்தர்யா ரஜினிகாந்தின் கணவருமான விசாகன் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார். நீண்ட நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினிகாந்த் தான் தவறவிட்ட ஆட்சி அதிகாரத்தை அண்ணாமலை மூலம் மீட்டெடுக்க, தனது அஸ்திவாரமாக மருமகன் விசாகனை அண்ணாமலையின் புதிய கட்சியில் களமிறக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
அண்ணாமலை தொடங்கவுள்ள இந்த புதிய இயக்கம் முழுமையான அரசியல் கட்சியாக மாறும்போது, ரஜினியின் மருமகன் விசாகனுக்கு பொதுச்செயலாளர் அல்லது அதற்கு இணையான முக்கிய பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி ரசிகர்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ள அண்ணாமலை, விசாகனை முன்னிறுத்தி ரஜினி ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவையும் வாக்குகளையும் தன்வசப்படுத்த காய் நகர்த்தி வருகிறார். இந்த கூட்டணி அமைந்தால், இவர்களின் புதிய கட்சி திமுகவை விட, தற்போதைய முதலமைச்சர் விஜய்யின் தவெக-வை முதன்மையாக எதிர்த்து தீவிர அரசியல் செய்யும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன
