BREAKING: டாஸ்மாக்கில் இனி இவர்களுக்கு மது கிடையாது… இரவோடு இரவாக தமிழக ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆனி 11, 2026

Spread the love

தமிழகத்தில் 21 வயதிற்கு குறைவான நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் மதுபானங்களை விற்கக் கூடாது என்று டாஸ்மாக் ஊழியர்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மது வாங்க வரும் வாடிக்கையாளர்களின் வயது குறித்து ஏதேனும் சந்தேகம் எழுந்தால், ஊழியர்கள் உடனடியாக அவர்களின் முறையான அடையாள அட்டையை கேட்டுச் சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இளம்பருவத்தினர் மதுப்பழக்கத்திற்கு ஆளாவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த விதியை மீறி, 21 வயதிற்குட்பட்டோருக்கு மது விற்பனை செய்யும் ஊழியர்கள் மீது ‘தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937’-ன் கீழ் மிகக் கடுமையான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் பாயும் என இத்துறை எச்சரித்துள்ளது.