“பணம் தராட்டி பார்சல் கிடையாது” ரூ.20 கூடுதல் கேட்டு பெண் வாடிக்கையாளரை மிரட்டிய டெலிவரி பாய்… கம்பெனிக்கே சவால் விட்ட அதிரடி வீடியோ.. ஆன்லைன் நுகர்வோரை அதிரவைத்த புதிய மோசடி..!!

By Swetha on ஆனி 9, 2026

Spread the love

சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சியூட்டும் காணொளியில், ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்ட பெரிய பார்சல்களை டெலிவரி செய்வதற்கு ரூ .20 கூடுதல் பணம் வேண்டும் என்று டெலிவரி பாய் ஒருவர் விசித்திரமான மற்றும் மிரட்டலான கோரிக்கையை முன்வைப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், அந்தப் பெண் வாடிக்கையாளர் கூடுதல் பணம் தர மறுத்து அவரிடம் கேள்வி எழுப்புகிறார். “நிறுவனத்திடம் முழுப் பணத்தையும் செலுத்திய பிறகு நான் ஏன் உங்களுக்குக் கூடுதல் பணம் தர வேண்டும்? பணம் தராவிட்டால் பார்சலைத் தரமாட்டீர்களா?” என்று அந்தப் பெண் கேட்கும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.அதற்கு அந்த டெலிவரி பாய் சற்றும் தயங்காமல், சிறிய பாக்கெட்டுகளாக இருந்தால் அப்படியே தந்துவிடுவேன் என்றும், ஆனால் பெரிய பார்சல்களுக்குக் கூடுதல் பணம் தராவிட்டால் இனிமேல் அவற்றை உங்கள் வீட்டிற்குக் கொண்டுவர மாட்டேன் என்றும் மிரட்டும் தொனியில் பதிலளிக்கிறார்.

   

இந்த அநியாயக் கோரிக்கையை எதிர்த்த வாடிக்கையாளர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளிக்கப் போவதாக எச்சரிக்கிறார். இருப்பினும், அந்த ஊழியர் சற்றும் பயப்படாமல், தாராளமாகப் புகார் அளித்துக் கொள்ளுங்கள் என்று கூறி, தன் பெயரையும் மொபைல் எண்ணையும் அவரே முன்வந்து தந்து வாடிக்கையாளருடன் ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.