வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000…. தமிழக அரசின் அடுத்த மாஸ்டர் பிளான்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது….!

By Nanthini on ஆனி 9, 2026

Spread the love

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் பர்வேஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்ற முக்கிய வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான முதற்கட்டப் பணிகளை அரசு முறைப்படி தொடங்கியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பொருளாதார ரீதியாக சிரமப்படும் பட்டதாரிகளுக்கு இந்தத் திட்டம் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் தகுதி வரம்புகள் குறித்த விவரங்கள் அரசு தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.