குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில், பார்வையாளர்கள் சிலர் அங்கு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த புலியின் மீது கற்களை எறியும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த மனிதாபிமானமற்ற செயல், விலங்குகளைப் பாதுகாக்கும் உயிரியல் பூங்காவின் பாதுகாப்பு மற்றும் பார்வையாளர்களின் அலட்சியப் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் கடும் அதிர்ச்சியும் கோபமும் அடைந்துள்ளனர். “இப்படிப்பட்ட நபர்களை சிறையில் அடைக்க வேண்டும்” என்றும், “அவர்களையும் அதே புலியின் கூண்டிற்குள் தூக்கி வீச வேண்டும்” என்றும் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வாயில்லா ஜீவன்களைத் துன்புறுத்தும் இதுபோன்ற நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
https://www.instagram.com/reel/DZUPDoqS0wP/?utm_source=ig_web_button_share_sheet
விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் உயிரியல் பூங்கா நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். பூங்காக்களில் உள்ள விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், இது போன்ற ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் பார்வையாளர்களுக்குப் பெரும் தொகையை அபராதமாக விதிப்பதோடு, அவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
