“இது என்ன புதுக்கதை?.. மருமகனை காதலித்து கைபிடித்த மாமியார்.. நீதிமன்றத்தில் நடந்த அதிர்ச்சி திருமணம்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!!

By Muthu Mani on ஆனி 9, 2026

Spread the love

இந்த விசித்திரமான சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்துள்ளது. மருமகனும் மாமியாரும் நீதிமன்ற வளாகத்தில் மாலை மாற்றிக் கொண்டு திருமணம் செய்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றாலும், காவல்துறை தரப்பில் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரம், ஆரம்பத்திலிருந்தே இவர்களுக்குள் நெருக்கமான உறவு இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், மருமகனின் முதல் மனைவியான அந்த மாமியாரின் மகளுக்கு என்ன ஆனது? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். தாயும் கணவனும் இணைந்து கொண்டதை அந்தப் பெண் ஏற்றுக்கொண்டாரா அல்லது இதனால் குடும்பம் பிரிந்ததா என்ற அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் தெரியவில்லை. இருப்பினும், குடும்பத்தில் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடு காரணமாகவே, அந்த நபர் தன் மனைவியைப் பிரிந்து மாமியாருடன் வாழத் தொடங்கியதாக கான்பூர் வட்டாரங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

   

மறுபுறம், “இந்திய சட்டப்படி இந்தத் திருமணம் செல்லுமா?” என்ற விவாதமும் வலுவாக எழுந்துள்ளது. இந்து திருமண சட்டத்தின்படி (Hindu Marriage Act), குறிப்பிட்ட சில நெருங்கிய மற்றும் முறை தவறிய உறவுகளுக்குள் (Sapinda மற்றும் Prohibited degrees of relationship) நடக்கும் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறி இவர்கள் இருவரும் எப்படி நீதிமன்றத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என்ற சட்ட ரீதியான கேள்விகளும், விமர்சனங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.