ச்சீ… மனைவி கோபித்து… தாய் வீட்டுக்கு போன நேரத்தில்.. இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்த ராணுவ வீரர்… நள்ளிரவில் அரங்கேறிய குடும்ப சண்டை…!!

By Swetha on ஆனி 8, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் மேடக் நகர் ராணுவ குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்னம் குமார் கவுட் (49). ராணுவ வீரரான இவருக்கும், இவரது மனைவி பத்மாவிற்கும் இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, பத்மா தனது கணவரிடம் கோபித்துக் கொண்டு, குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

மனைவி வீட்டை விட்டுச் சென்றதைப் பயன்படுத்திக் கொண்ட பொன்னம் குமார் கவுட், இரண்டு பெண்களைத் தனது வீட்டிற்கு அழைத்து வந்து அவர்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். ராணுவ வீரரின் இந்தச் செயல் அக்கம் பக்கத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், இதுகுறித்த தகவல் அவரது மனைவி பத்மாவிற்கும் தெரியவந்தது.

   

இதனை அறிந்த பத்மா உடனடியாக வீட்டிற்கு வந்து, அந்நியப் பெண்களுடன் உல்லாசமாக இருந்தது குறித்துத் தனது கணவரிடம் நியாயம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பெரும் ஆத்திரமடைந்த பத்மா, தனது கணவரின் இந்தச் செயலால் ஏற்பட்ட கோபத்தில் அடுத்தகட்டமாகத் தீவிரமான முடிவை எடுத்தார்.