இனி இவங்களுக்கு புது ரேஷன் கார்டு கிடைக்காதா?… கசிந்த அதிர்ச்சித் தகவல்…. தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் பொதுமக்கள், தாலுகா அலுவலகங்களில் தங்களது மனுக்கள் நிராகரிக்கப்படுவதால் பெரும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாகியுள்ளனர். குறிப்பாக, தாய், தந்தை மற்றும் ஒரே ஒரு மகன் இருக்கும் குடும்பத்தில், அந்த மகனுக்குத் திருமணமாகி அவர் தனியாகப் புதிய ரேஷன் கார்டு வாங்க விரும்பினால், அதற்குத் தற்போதைய நடைமுறைகள் முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒரே மகனின் பெயரைப் பெற்றோரின் கார்டில் இருந்து நீக்குவதற்கு தாலுகா அலுவலகங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகின்றன. கூட்டுக்குடும்பமாக வாழ முடியாத சூழலில், தங்களுக்குரிய அரசு நலத்திட்டங்களைப் பெற முடியாமல் தவிக்கும் இத்தகைய நடுத்தரக் குடும்பங்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த விதிமுறைகளில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, இப்பிரச்சினைக்கு விரைவில் நல்லதொரு தீர்வை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே வலுவாக எழுந்துள்ளது.