பாஜகவில் பரபரப்பு….. ஒரு சீட் ₹30 லட்சமா?…. அண்ணாமலையின் குற்றச்சாட்டால் அதிரும் தமிழக அரசியல்… அதிர வைக்கும் உண்மை….!

By Nanthini on ஆனி 7, 2026

Spread the love

பாஜகவில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா ₹30 லட்சம் பெற்றுக்கொண்டு தேர்தல் சீட் வழங்கப்பட்டதாக அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளதாக தனியார் நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான நிதின் நபினிடம் அண்ணாமலை அளித்ததாகக் கூறப்படும் அந்த ரகசியக் கடிதத்தில், தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத நபர்களுக்கும், கிரிமினல் பின்னணி மற்றும் வழக்குகள் உள்ளவர்களுக்கும் பணம் பெற்றுக்கொண்டு சீட் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கட்சிக்குள் தொடர்ந்து மூத்த தலைவர்களுக்கே மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்பட்டதும், தகுதியான இளைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதும் கட்சியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்தச் செய்தி விவரங்கள் தெரிவிக்கின்றன.