“ரூ.2,000 கொடுத்துதான் வெற்றியா?” TVK வேட்பாளரின் அதிரடி வாக்குமூலம்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!

By Soundarya on ஆனி 4, 2026

Spread the love

ஓமலூர் TVK வேட்பாளர் அதியமான், சேலம் மேற்கு TVK MLA லட்சுமணன் வாக்காளர்களுக்கு ₹2,000 கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்று பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக திருச்சியில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தேர்தலில் யாருக்கும் பணம் கொடுக்காமல் TVK வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தற்போது அதே கட்சியைச் சேர்ந்த வேட்பாளரே இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தால் தமிழக வெற்றிக் கழகம் (TVK) கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கட்சியின் தலைவரின் கூற்றுக்கு முரணாக வேட்பாளரின் இந்த பேச்சு அமைந்துள்ளதால், இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.