“நடுரோட்டில் ஆடையைக் கலைத்து அத்துமீறிய வாலிபர்.. அடுத்த நொடி நடந்த அந்த ட்விஸ்ட்.. தைரியமாக மாணவி எடுத்த அந்த அதிரடி முடிவு.. மிரள வைக்கும் வீடியோ”..!!

By Muthu Mani on ஆனி 4, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர் மாவட்டம் தேவ்கான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரன்மோ கிராமத்தின் அருகே, மாணவி ஒருவருக்குத் தொடர் தொல்லை கொடுத்து வந்த வாலிபருக்குப் பொதுமக்கள் முன்னிலையிலேயே தகுந்த பாடம் புகட்டப்பட்டுள்ளது. சாஹில் என்ற அந்த வாலிபர், அந்த வழியே செல்லும் பள்ளி/கல்லூரி மாணவியை கடந்த சில நாட்களாகவே பின்தொடர்ந்து சென்று, வழிமறித்துத் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, அநாகரீகமான முறையில் தனது ஆடைகளைக் கலைந்து அந்த மாணவியிடம் வக்கிரமாக நடந்து கொண்டுள்ளார்.

ஆரம்பத்தில் பயந்துபோன அந்த மாணவி, பின்னர் மிகுந்த தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த ஈவ்-டீசருக்கு (Eve-teaser) நடுரோட்டிலேயே தர்மஅடி கொடுத்துள்ளார். மாணவியின் இந்த அதிரடித் தாக்குதலில் அந்த வாலிபரின் வக்கிர புத்தி அனைத்தும் அங்கேயே பறந்துபோனது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தைரியமாகச் செயல்பட்டு அந்த வக்கிர நபரை வெளுத்து வாங்கிய மாணவியின் துணிச்சலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.