BREAKING: திடீரென ரூ.12,000 உயர்ந்தது… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆனி 1, 2026

Spread the love

கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பத் தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்னைக்கான விமானக் கட்டணம் வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமாக ₹6,500 வரை இருக்கும் தூத்துக்குடி – சென்னை இடையேயான விமானக் கட்டணம் இன்று ₹18,272 ஆகவும், ₹5,500 ஆக இருந்த மதுரை – சென்னை கட்டணம் ₹17,300 ஆகவும் எகிறியுள்ளது. இதேபோல், கோவை – சென்னை விமானக் கட்டணம் ₹4,744-ல் இருந்து ₹16,504 ஆகவும், திருச்சி – சென்னை கட்டணம் ₹4,750-ல் இருந்து ₹16,500 ஆகவும் பல மடங்கு உயர்ந்து பொதுமக்களின் பாக்கெட்டைக் பதம் பார்த்துள்ளது. விடுமுறை முடிந்து பணிக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நடுத்தர மற்றும் எளிய மக்கள், இந்தத் திடீர் கட்டண உயர்வால் செய்வதறியாது திகைத்து, கடும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்ந்துள்ளனர்.