கடந்த 25-ம் தேதி வெளியிடப்பட்ட கடன் தள்ளுபடி அறிவிப்பை அரசு திரும்பப் பெற (வாபஸ் பெற) திட்டமிட்டுள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுமாறு கூட்டுறவு மற்றும் வேளாண் துறை அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, 5 ஏக்கர் வரையிலான விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்வது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகத் தலைமைச் செயலக வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
இச்செய்தியானது “way2news” என்ற செய்திச் செயலியின் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்புகைப்படத்தின் கீழ் பகுதியில் இந்தச் செய்தி வெளியான நேரமாக “06:30 PM, 31st May 2026” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
