ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!

By Swetha on வைகாசி 31, 2026

Spread the love

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுகளின் தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் விரைவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவித்துள்ளார். ரேஷன் கடை ஒன்றில் அவர் நேரில் ஆய்வு செய்த போது இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

அமைச்சர் ஆய்வு மேற்கொண்ட போது, பொதுமக்கள் அவரிடம் சில முக்கியப் புகார்களைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, புதிய ரேஷன் அட்டை பெறுவதிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரைச் சேர்ப்பதிலும், முகவரி உள்ளிட்ட விபரங்களை மாற்றுவதிலும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் தாமதங்கள் இருப்பதாக மக்கள் அவரிடம் எடுத்துரைத்தனர்.

   

மக்களின் இந்த நியாயமான கோரிக்கைகளைக் கேட்டறிந்த அமைச்சர், இந்தக் குறைபாடுகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்துள்ளார். அதற்கேற்ப தேவையான அனைத்து உரிய நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்படும் என்றும் அவர் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.