அதிர்ந்து போன அமெரிக்கா! லான்ச் பேடிலேயே சுக்குநூறாக உடைந்த ஜெஃப் பெசோஸின் மெகா ராக்கெட் – மிரள வைக்கும் காட்சி..!!

By Swetha on வைகாசி 30, 2026

Spread the love

ஜெஃப் பெசோஸின் ‘புளூ ஆர்ஜின்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ‘நியூ கிளென்’ ராக்கெட், புளோரிடாவில் உள்ள கேப் கனாவெரல் விண்வெளி தளத்தில் நடைபெற்ற சோதனையின் போது பயங்கரமாக வெடித்துச் சிதறியது. ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதற்கு முன்னதாக, அதன் என்ஜின்களைச் சோதித்துப் பார்க்கும் ‘ஹாட்ஃபயர் டெஸ்ட்’ எனப்படும் நிலையான என்ஜின் சோதனையின் போது இந்த விபத்து நேரிட்டது. ராக்கெட் திடீரென வெடித்ததில் அந்தப் பகுதியே பிரம்மாண்ட நெருப்புக் கோளமாக மாறியதோடு, சுற்றியிருந்த வீடுகளும் அதிர்ந்தன.

இந்த விபத்தில் விண்கலன் மற்றும் அதன் ஏவுதளம் பலத்த சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பெசோஸ் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், “விபத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை, அதை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளன. இது ஒரு கடினமான நாள், என்றாலும் சேதமடைந்தவற்றை மீண்டும் கட்டமைத்து விரைவில் பறக்கத் தொடங்குவோம்” என்றும் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

   

ஜூன் முதல் வாரத்தில் அமேசான் நிறுவனத்தின் இணைய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த விபத்து புளூ ஆர்ஜின் நிறுவனத்திற்குப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதோடு, நாசாவின் (NASA) புகழ்பெற்ற ‘ஆர்ட்டெமிஸ்’ நிலவுப் பயணத் திட்டங்களுக்கும் இந்த ராக்கெட்டையே பயன்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்ததால், இச்சம்பவம் விண்வெளித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் தான் இந்த ராக்கெட்டின் முந்தையப் பயணத்தில் ஏற்பட்ட கோளாறுக்காகப் பறக்கத் தடை விதிக்கப்பட்டு, அது நீக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.