இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலமாக இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று ஒரு கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு, சஹர்சா நீதிமன்றத்தில் தங்களது திருமணத்தைப் முறைப்படி பதிவு செய்தும் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே 24 அன்று தனது மகளின் மாமியார் வீட்டிற்குச் சென்றதாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். ஆனால், அங்கு சென்றபோது அவரது மருமகன் வீட்டில் இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், வீட்டின் அருகில் இருந்தவர்களிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அக்கம் பக்கத்தினர் கூறிய தகவலைக் கேட்டு அவர் நிலைகுலைந்து போனார். அவரது மகள் ஏற்கனவே சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே இறந்துவிட்ட அதிர்ச்சி உண்மை அந்த விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
