“நமக்குள்ள சண்டை போட்டா விஜய் உள்ள வந்துருவார்!”.. EPS கூட்டிய அவசர பஞ்சாயத்து.. வேலுமணி போட்ட அதிரடி கண்டிஷன்.. ஆடிப்போன அரசியல் களம்..!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love

2026 தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவை சந்தித்த நிலையில், 108 தொகுதிகளில் வென்ற தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை அமைத்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து அ.தி.மு.க-வில் அதிருப்தி அதிகரித்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். இதன் உச்சகட்டமாக த.வெ.க. அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் வேலுமணி அணியைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக வாக்களித்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி த.வெ.க. அமைச்சரவையில் இடம் கிடைக்காததாலும், தற்போது மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்ததாலும் வேலுமணி அணியில் ஏமாற்றம் நிலவியது. மேலும், சுகுமார், திலீபன் ஜெய்சங்கரன், ஹரிபாஸ்கர் உள்ளிட்ட 5 எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியதால் வேலுமணி தரப்பின் பலம் கணிசமாகக் குறைந்தது.

இந்தச் சூழலில், அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவைச் சரிசெய்வதற்காக சென்னையில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரின் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினரிடையே ரகசியச் சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதில் வேலுமணி தரப்பில் சில முக்கிய நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சி பிளவுபட்டபோது யார் எந்தப் பொறுப்பில் இருந்தார்களோ, அதே பதவிகளை மீண்டும் அவர்களுக்கே எவ்வித நிபந்தனையுமின்றித் திரும்ப வழங்க வேண்டும் என்றும், நீக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

   

மேலும், அ.தி.மு.க-வில் இருதரப்புக்கும் சம பிரதிநிதித்துவம் கொண்ட ஒரு “வழிகாட்டு குழு” அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த அமைப்பு எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே பொதுச்செயலாளர் செயல்பட வேண்டும் என்றும் வேலுமணி தரப்பு டிமாண்ட் செய்துள்ளது. எனினும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்களை உடனடியாக மீண்டும் ஏற்பதில் எடப்பாடி தரப்பில் உள்ள சில மூத்த நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். அதே நேரத்தில், அ.தி.மு.க-வில் நீடிக்கும் இந்த மோதல் முதல்வர் விஜய்க்கே அரசியல் ரீதியாக மேலும் சாதகமாக அமையும் என்பதால், இந்த உட்கட்சிப் பஞ்சாயத்தை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என இருதரப்பு சீனியர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.