“பல்வேறு கோணங்களில் அனுப்பு!”.. காதலனை குஷிப்படுத்த தோழிகளை ஆபாச வீடியோ எடுத்த காதலி.. நெஞ்சை பதறவைக்கும் வாக்குமூலம்..!!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காகச் செயல்பட்டு வரும் தனியார் விடுதி ஒன்றில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை டவுன் செங்குந்தர் நடுத்தெருவைச் சேர்ந்த மகரஜோதி (39) என்பவர் தனது குழந்தைகளுடன் வந்து தங்கியுள்ளார். சமீபகாலமாக இவருடைய நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், விடுதியின் மற்ற அறைகளில் தங்கியிருந்த பெண்களைத் தனது செல்போனில் ரகசியமாகப் படம் பிடிப்பதாக சகப் பெண்கள் மத்தியில் புகார்கள் எழுந்தன. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் மகரஜோதியின் செல்போனை வாங்கி ஆய்வு செய்தபோது, அங்கு தங்கியிருந்த பெண்களை ஆபாசமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, கோவையில் வசிக்கும் கண்ணன் என்பவருக்கு அவர் அனுப்பியிருப்பது அம்பலமானது.

இதுகுறித்து விடுதியின் காப்பாளர் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் நாககுமாரி விசாரணை நடத்தி இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார். தொடர்ந்து, நேற்று முன்தினம் மகரஜோதியைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், விடுதிப் பெண்களைப் பல்வேறு கோணங்களில் ஆபாசமாகப் படம் பிடித்து அனுப்புமாறு அவரது காதலனான கண்ணன் வற்புறுத்தியதாகவும், தனது காதலனை குஷிப்படுத்துவதற்காகவே இந்தத் துரோகச் செயலில் ஈடுபட்டதாகவும் மகரஜோதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

   

தற்போது கைதாகியுள்ள மகரஜோதியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான அவரது காதலன் கண்ணனைப் பிடிக்கக் காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தலைமறைவாக இருக்கும் கண்ணனைக் கைது செய்வதற்காகத் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.