தி லெஜெண்ட் சரவணன் வெளியிட்ட செல்பி புகைப்படம் , நடிகர் விஜய்க்கே டப் கொடுப்பாரு போல !! வைரலாகும் புகைப்படம்…..

By Begam

Updated on:

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தற்போது நடிகர் விஜய்க்கு போட்டியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில்  இப்புகைப்படம் ரசிகர்களால் இப்பொழுது அதிகம் ஷேர் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான ஜவுளிக்கடைகள் ஒன்றான சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் தி லெஜெண்ட் சரவணன்.

   

‘தி லெஜெண்ட்’ திரைப்படத்தில் நடித்தது மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் .வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி,என பல மொழி படம் வெளியானது. ஆனால் இத்திரைப்படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை. அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர் அடுத்த திரைப்படத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்.

லெஜெண்ட் சரவணன் இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா விஜயுடன் வாரிசு திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து செல்பி புகைப்படம் ஒன்றை எடுத்து இணையதளத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டது. விஜய்க்கு போட்டியாக தற்பொழுது லெஜென்ட் சரவணன் தனது போட்டோவை பதிவேற்றியுள்ளார்.

விஜய் எவ்வாறு மூன்று முடியை முன்னாள் தொங்கவிட்டு போஸ் கொடுத்து இருக்கிறாரோ  அதேபோல லெஜென்ட்  சரவணனும்  போட்டோ எடுத்து அப்லோட் செய்துள்ளார். தற்பொழுது இந்த புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.