பிக் பாஸ் தர்ஷன் பிறந்தநாள் கொண்டாட்டம்…. பிரபல நடிகையுடன் படுக்கையறையில் கேக் வெட்டிய புகைப்படங்கள்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் …

By Begam

Published on:

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் தர்ஷன். இவருக்கு பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் பிரபல நடிகையுடன் படுக்கையறையில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது வைரலாகி  வருகிறது.

பிக் பாஸ் 3 – ல் தமிழகத்திற்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகமாக களமிறங்கியவர் சாஃப்ட்வேர் துறையில் பணியாற்றும் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். இலங்கை மாடல் ஆன இவர் சினிமா துறையில் கால் பதிக்க வேண்டும் என்று நிறைய கனவுகளுடன் சென்னை வந்து சேர்ந்தார். 100 இடங்களுக்கும் மேலாக ஆடிஷன்களுக்கு சென்றும்  செலக்ட் ஆகவில்லை.

   

பின்னர் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது .கிடைத்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டார். பிக் பாஸ் 3 பங்கேற்ற இவர் வெற்றி பெறுவார் என்று நம்பிக்கொண்டிருந்த நிலையில் போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். இதனால் கமல் அவரிடம் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தார்.

கமல் கூறியவாறு கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தில் நடித்து  அவருடைய திறமையை  நிரூபித்தார்.  தற்பொழுது நடிகை லாஸ்லியா  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ஹேப்பி பர்த்டே’ என்று கூறி தர்ஷன் உடன் படுக்கை அறையில் தர்ஷன் கேக்  ஊட்டுவது போன்ற  புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.