பாடகி ரம்யா சத்யாவின் மகனா இவர் ? இவ்வளவு பெருசா வளந்துட்டாரே !! வைரலாகும் வீடியோ…..

By Begam on புரட்டாதி 17, 2022

Spread the love

ரம்யா என். எஸ் .கே இவர் பழம்பெறும் நடிகர் என். எஸ் .கலைவாணரின் பேத்தியாவார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடியுள்ளார். தனது சிறு வயது முதலே  கர்நாடிக் இசையை முறைப்படி  வந்துள்ளார்.

   

கர்நாடக சங்கீதத்தோடு ராப் பாடல்கள் பாடுவதிலும் மிகுந்த கெட்டிக்காரர். இவர் முந்தைய பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு பிரபலமடைந்தார். சீக்கிரமாக  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினாலும் மக்களிடம் நல்ல பெயரை வாங்கினார். விஜய் டிவியில் ‘நீலக்குயில்’ சீரியலில் நடித்த சத்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

   

 

ரம்யா சத்யா தம்பதியினருக்கு ஒரு அழகிய ஆண் குழந்தை உள்ளது. தற்பொழுது சத்யா தனது மகனின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், ரம்யா சத்யாவின் மகனா இவர்? இவ்வளவு பெருசாக வளந்துட்டாரு… என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Sathya S.k (@sathya_actor)