தூத்துக்குடி அண்ணா நகர் மங்களபுரத்தைச் சேர்ந்த ராஜாவின் மனைவி அமுதா (50). இவருடைய மகன் அருண்குமாருக்கும், அவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராறுகளின் போது, அமுதா எப்போதும் தனது மகனுக்கு ஆதரவாகவே பேசி வந்துள்ளார். இதனால் மருமகள் வீட்டாருக்கும் அமுதாவிற்கும் இடையே கடும் அதிருப்தியும், முன்விரோதமும் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், ஏற்பட்ட ஆத்திரத்தின் காரணமாக ஒரு கும்பல் அமுதாவை அரிவாளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இதுகுறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரஸ்வதியின் சகோதரரான சங்கர் (32) மற்றும் அவரது நண்பரான மதன் ஆகிய இருவருமே இந்த கொடூரக் கொலையைச் செய்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தப்பியோடிய குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
