தமிழக பெண்களுக்கு குட் நியூஸ்… மாதம் ரூ.2500 எப்போது முதல்?… தவெக அரசு மகிழ்ச்சி செய்தி…!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

தமிழகத்தில் உள்ள 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களில், வருமான வரி செலுத்துவோர் மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் மாதம் ₹2,500 வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தை முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த முக்கிய அறிவிப்பு வரவிருக்கும் பட்ஜெட் உரையில் அதிகாரப்பூர்வமாக இடம் பெறவுள்ளது என்பதை அமைச்சர்களின் சமீபத்திய பேட்டிகள் வாயிலாக உறுதியாக அறிய முடிகிறது.

குறிப்பாக, வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக, அதாவது வரும் செப்டம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் இந்த ₹2,500 வழங்கும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த அரசு தீவிரமாக முடிவு செய்துள்ளது, ஒட்டுமொத்த குடும்பத்தலைவிகளிடையே பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.