நடப்பு கல்வி ஆண்டில் நடைபெற்று முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்குப் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அலுவலர்கள் (CEO) அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர்.
அதில், மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால், தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் அனைவரும் எவ்வித விடுப்பும் எடுக்காமல் கட்டாயம் பள்ளிகளுக்கு வருகை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இந்த அரசு உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகளுக்கு வராத மற்றும் அலட்சியமாகச் செயல்படும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
