“அவங்கள சேர்த்தா அவ்ளோதான்”… விஜய் எடுத்த அதிரடி முடிவு… அதிர்ச்சியில் உறைந்த வேலுமணி, சி.வி.சண்முகம்… தவெக ஆட்சியில் அடுத்த ட்விஸ்ட்….!

By Nanthini on வைகாசி 16, 2026

Spread the love

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிற கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த அரசியல் மாற்றத்தால் அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டு, அக்கட்சியினரிடையே பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் களம் இறங்கினர். தவெக அரசுக்கு ஆதரவளித்தால் தங்களுக்கு அமைச்சரவையிலும், வாரியங்களிலும் முக்கியப் பதவிகள் கிடைக்கும் என்ற வாக்குறுதியை நம்பி, வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தவெக அமைச்சரவையில் அதிமுகவினருக்கு ஐந்து இடங்கள் ஒதுக்கப்படும் என்று ஆரம்பத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், தவெகவை ஒரு ‘தூய சக்தி’ என்றும், ஊழலுக்கு எதிரான நேர்மையான ஆட்சி என்றும் முதலமைச்சர் விஜய் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தார். தற்போது ஆதரவு அளித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் போன்ற பலர் மீது ஏற்கனவே ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழலில், அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் தவெகவின் நேர்மையான பிம்பம் கெட்டுவிடும் என்றும், விஜய்யும் ஊழலுக்குத் துணை போகிறார் என்ற விமர்சனம் எழும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

   

குறிப்பாக, ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட தவெகவின் முக்கிய ஆலோசகர்கள், அதிமுகவினரை அமைச்சரவையில் இணைப்பது கட்சியின் எதிர்காலத்திற்குச் சரியாக இருக்காது என்றும், இதனால் கட்சியின் மீது ஊழல் கரை படியும் என்றும் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின் போது விஜய் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், தற்போது பதவிக்காக அவர்களைச் சேர்த்துக்கொண்டால் அது திமுகவுக்குப் பெரிய அரசியல் ஆயுதமாக மாறிவிடும் என்று தவெக தலைமை அஞ்சுகிறது. இந்த பிம்ப அரசியல் காரணங்களால், அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்க விஜய் தீவிர யோசனையில் ஆழ்ந்துள்ளார், இது வேலுமணி அணியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

தவெக தரப்பில் இருந்து நல்ல தகவல் வரும் என்று காத்திருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் பலர் தற்போது அதிருப்தியடைந்துள்ளனர். இதன் விளைவாக, கே.சி. வீரமணி, பெஞ்சமின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்துள்ளனர். நிலைமையைச் சமாளிக்க, “நமக்கு நிச்சயமாக அமைச்சரவையில் இடம் கிடைக்கும், பொறுமையாக இருங்கள்” என்று வேலுமணியும், சி.வி. சண்முகமும் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்களை சமாதானப்படுத்தி வருகின்றனர். எனினும், இன்னும் சில நாட்களில் அமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டால், வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே திரும்புவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.