இந்தோனேசியாவில் ஒரு பெண் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கினார். புதிய வாகனம் வாங்கிய மகிழ்ச்சி அவர் முகத்தில் தெரிந்தாலும், அவருக்கு அந்த ஸ்கூட்டரை ஓட்டத் தெரியாது என்ற ஒரு பெரிய சிக்கல் இருந்தது. பொதுவாக இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினரின் உதவியை நாடுவார்கள் அல்லது வாகனத்தை வீட்டிற்கு கொண்டு செல்ல வேறு ஏதேனும் போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்வார்கள். ஆனால், அந்தப் பெண் யாருடைய உதவியும் இல்லாமல் ஒரு விசித்திரமான முடிவை எடுத்தார்.
அவர் மற்றொருவர் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து கொண்டு, தான் புதிதாக வாங்கிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படியே தனது மடியில் தூக்கி வைத்துக் கொண்டார். அந்த கனமான ஸ்கூட்டரை மடியில் சுமந்தபடி, எந்தவொரு பயமும் பதற்றமும் இன்றி அவர் சாலையில் பயணம் செய்த விதம் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பரபரப்பான போக்குவரத்து நிறைந்த சாலையில், எடையைப் பற்றியோ அல்லது சமநிலையை இழப்பதைப் பற்றியோ கவலைப்படாமல் அவர் காட்டிய அசாத்தியமான தன்னம்பிக்கை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
இந்த வினோதமான மற்றும் வேடிக்கையான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், அந்தப் பெண்ணின் அசாத்திய தைரியத்தையும், பிரச்சனையை கண்டு பயப்படாமல் உடனடியாக ஒரு தீர்வை யோசித்த அவரது மனப்பக்கவத்தையும் பாராட்டி வருகின்றனர். “மனிதனிடம் அதீத தன்னம்பிக்கை இருந்தால், எந்தவொரு பெரிய சவாலும் சிறியதாகிவிடும்” என்பதற்கு இந்தப் பெண்ணே மிகச்சிறந்த உதாரணம் என்று சமூக வலைதள பயனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
