உட்காந்து பேசுவோம் பாஸ்..! போங்க போங்கன்னு விரட்டாம வாங்க வாங்கன்னு கூப்டுங்க… இபிஎஸ்-ஸுக்கு எஸ்.பி.வேலுமணி போட்ட திடீர் சமாதான தூது..!!

By Soundarya on வைகாசி 15, 2026

Spread the love

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களுக்கு இடையே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு (இபிஎஸ்) சமாதான அழைப்பு விடுத்து எக்ஸ் (X) தளத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபத்திய அரசியல் நகர்வுகள் மற்றும் கட்சியின் பதவிப் பறிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ளது. “போங்க போங்க” என்று எப்போதும் போலத் தங்களை விரட்டி அடிக்காமல், “வாங்க வாங்க” என்று ஒருமுறை அன்போடு அழைத்துப்பேச வேண்டும் என அவர் இபிஎஸ்-ஸை வலியுறுத்தியுள்ளார். இப்போதும் தலைமை அழைத்தால் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், கடந்த காலத் தேர்தல் தோல்விகளுக்கான காரணங்களை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கழகத்தின் எதிர்காலப் பாதையைத் தனிச்சையாகத் தீர்மானிக்காமல், அனைவரும் ஒன்றிணைந்து கூட்டு முடிவாக எடுக்க வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என வேலுமணி தனது பதிவில் தெளிவுபடுத்தியுள்ளார். தலைமை தங்களை அரவணைத்துச் சென்றால் எல்லாமே மாறும் என்றும், அதன் மூலம் கட்சி மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதரவளித்தது தொடர்பாக அதிமுகவின் இரு பிரிவினரிடையே சட்டப்பேரவையில் மோதல் வெடித்த சூழலில், வேலுமணி விடுத்துள்ள இந்த சமாதானத் தூது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.