தமிழ்நாட்டில் இன்று (மே 14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,23,200-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் திடீரென கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் குறைந்து ரூ.1,20,000-க்கு விற்பனையானது. இந்த விலையிறக்கத்தைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், ஒரு சவரன் ரூ.120,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மறுபுறம், வெள்ளியின் விலை இன்று கணிசமாகக் குறைந்து நுகர்வோருக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.315-க்கும், ஒட்டுமொத்தமாக ஒரு கிலோவுக்கு ரூ.5,000 வரை சரிந்து ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையில் வெள்ளியின் விலை சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
