1 இல்ல 2 இல்ல 5 முறைக்கு மேல்… பேஸ்புக் காதலனை நம்பி ஹோட்டலுக்கு சென்ற இளம்பெண்… கொஞ்ச நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

By Soundarya on வைகாசி 14, 2026

Spread the love

முகநூலில் (Facebook) ஏற்பட்ட நட்பு விபரீதமானதில், கணவனை இழந்த பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டு பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். லாரி ஓட்டுநரான தனது கணவரின் மறைவுக்குப் பின், மீரா என்ற அந்தப் பெண் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். கணவனை இழந்த துயரமும் தனிமையும் அவரை வாட்டிய நிலையில், முகநூல் மூலமாக ஒரு நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் மீராவைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, ஹோட்டல் அறைக்கு வரவழைத்துப் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணைத் தொடர்ந்து ஏமாற்றி வன்கொடுமை செய்துள்ளார். ஒருகட்டத்தில் மீரா அந்த இடத்திலிருந்து தப்பிக்க முயன்றபோதும், அவரைத் தப்பவிடாமல் தடுத்து ஐந்து முறைக்கும் மேலாகக் கொடுமைப்படுத்தியுள்ளார்.

   

பாதிக்கப்பட்ட மீரா தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியபோது, அந்த நபர் திருமணத்திற்குத் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளார். மீரா அளித்த புகாரின் அடிப்படையில், தற்பொழுது காவல்துறையினர் அந்த நபரை அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.