துறையூர் டூ சட்டசபை!… யார் இந்த ரவிசங்கர்?… அதிமுக வேட்பாளரை வீழ்த்தி, இப்போது துணை சபாநாயகராக உயர்ந்துள்ள தவெக-வின் ‘டார்க் ஹார்ஸ்’… மிரள வைக்கும் பின்னணி..!!!

By Muthu Mani on வைகாசி 11, 2026

Spread the love

தமிழக முதல்வராகத் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றதைத் தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் தற்காலிக சபாநாயகர் எம்.வி. கருப்பையா தலைமையில் உற்சாகமாகத் தொடங்கியது. இக்கூட்டத்தில் முதல்வர் விஜய் உட்பட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் எம்.எல்.ஏ-க்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நாளை சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.

தவெக சார்பில் சபாநாயகர் பதவிக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ ஜே.சி.டி. பிரபாகரும், துணை சபாநாயகர் பதவிக்குத் துறையூர் (தனி) தொகுதி எம்.எல்.ஏ ரவிசங்கரும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். இவர்கள் இருவரும் முதல்வர் விஜய் முன்னிலையில் சட்டசபைச் செயலாளரிடம் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்தனர். எதிர்க்கட்சியான திமுக சார்பில் சபாநாயகர் பதவிக்கு சக்கரபாணி நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இறுதியில் யாரும் போட்டியிடாததால் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர்.

   

துணை சபாநாயகராகத் தேர்வாகியுள்ள ரவிசங்கர், துறையூர் தனித் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவை விட 9,614 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்த நிலையில், தவெக தனது முதல் அரசியல் பயணத்திலேயே மிக முக்கியமான நாடாளுமன்றப் பதவிகளைத் தன்வசப்படுத்தியுள்ளது.