மத்திய அரசு ஊரகப்பகுதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஜூலை 1 முதல் ‘VB-G RAM G’ எனும் புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு (MNREGA) மாற்றாகக் கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம், கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு கூடுதல் வாழ்வாதார பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக 100 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இனி வரும் காலங்களில் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க இத்திட்டத்தின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி மாற்றமானது கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கும், தொழிலாளர்களின் வருமான உயர்வுக்கும் பெரும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
