விஜய் செய்த போர்ஜரி வேலை… தைரியமிருந்தா அதை செஞ்சிருக்கலாமே… அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை வைத்த TTV..!!

By Soundarya on வைகாசி 9, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆட்சி அமைப்பதற்காக ஆளுநரிடம் சமர்ப்பித்த ஆதரவு கடிதத்தில் தனது கட்சியின் எம்.எல்.ஏ கையெழுத்தைப் போலியாக இட்டுள்ளதாக (Forgery) அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். “அமமுக எம்.எல்.ஏ ஆதரவு அளிப்பதாக இருந்தால், அவரையும் ஆளுநரைச் சந்திக்க நேரில் அழைத்துச் சென்றிருக்கலாமே?” எனக் கேள்வி எழுப்பிய அவர், போலி கடிதத்தைக் கொடுத்துவிட்டுப் பின்னால் குதிரை பேரம் பேசவே விஜய் இத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளதாகத் தனது அடுக்கடுக்கான புகாரில் தெரிவித்துள்ளார்.

தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை நிரூபிக்க விஜய் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். ஆனால், தனது கட்சி சட்டமன்ற உறுப்பினரைக் காணவில்லை என்றும், அவரை வற்புறுத்தி அல்லது முறையற்ற வழிகளில் தங்கள் பக்கம் இழுக்க தவெக முயல்வதாகவும் டிடிவி தினகரன் தெரிவிக்கும் இக்குற்றச்சாட்டுகள் 2026 தேர்தல் களம் முடிந்த பிறகும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.