திருமணமாகி கணவருடன் வசித்து வந்த பெண் ஒருவர், தனது முன்னாள் காதலனை உல்லாசமாக இருக்கலாம் என ஆசைவார்த்தை கூறி ஹோட்டலுக்கு வரவழைத்து, தனது கணவருடன் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமணத்திற்கு முன்பு இருவரும் தீவிரமாக காதலித்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட தங்களின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காதலனின் செல்போனில் இருந்ததாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் புகைப்படங்களை வைத்து அவர் தன்னை மிரட்டியதாகவும், கடந்த ஒரு மாதமாக ஹோட்டலுக்கு வரும்படி வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
காதலனின் மிரட்டலுக்குப் பணிந்து, தனது கணவருக்குத் தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு அந்தப் பெண் ரகசியமாகச் சென்று அவரைச் சந்தித்து வந்துள்ளார். ஆனால், காதலன் தினமும் அழைக்கத் தொடங்கியதால் சந்தேகமடைந்த கணவரிடம் அந்தப் பெண் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து ஒரு திட்டத்தைத் தீட்டினர். அதன்படி, மீண்டும் காதலனை ஹோட்டலுக்கு வரவழைத்து, அங்கிருந்த கற்கள் மற்றும் கட்டைகளால் கொடூரமாகத் தாக்கி அவரைக் கொலை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
