திருமண உறவுகளையும் குடும்ப கௌரவத்தையும் சுக்குநூறாக உடைக்கும் வகையில், 28 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தனது 18 வயது மைத்துனியுடன் ஊரை விட்டு ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் உறவினர்களிடையே தெரியவந்தபோது குடும்பமே போர்க்களமாக மாறியது. ஆனால், அடுத்த நாளே யாரும் எதிர்பார்க்காத ஒரு “மெகா ட்விஸ்ட்” அரங்கேறியது. மைத்துனியுடன் ஓடிய அந்த நபர், கையோடு மைத்துனியின் சகோதரியையும் அழைத்துக் கொண்டு மாயமானார். ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் அவர் மாயமான தகவல் காட்டுத்தீயாகப் பரவி, அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
தங்கள் குடும்ப மானம் கப்பலேறிவிட்டதை உணர்ந்த இரு தரப்பு குடும்பத்தினரும், ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வீதியில் இறங்கி மோதத் தொடங்கினர். தங்கள் தரப்பு நியாயத்தை நிலைநாட்டவும், உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் மாற்றி மாற்றிப் பழிபோட்டுக்கொண்டனர். சமூகத்தில் நிலவும் மதிப்பையும் கௌரவத்தையும் தற்காத்துக் கொள்ள இரு குடும்பத்தினரும் போராடி வரும் நிலையில், இந்த விவகாரம் தற்போது காவல் நிலையம் வரை சென்றுள்ளது. இந்த விசித்திரமான காதல் மற்றும் கடத்தல் சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
