தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தில் புதிய ஆட்சியை அமைப்பதற்கான இறுதி இலக்கை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) ஆகிய இடதுசாரி கட்சிகள் ஆதரவு கடிதம் வழங்கியிருந்த நிலையில், தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) தவெக-விற்குத் தனது நிபந்தனையற்ற ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) மற்றும் விசிக (2) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் தவெக-வின் மொத்த பலம் 118-ஆக உயர்ந்துள்ளது.
ஆட்சியமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை எண்ணிக்கையைத் தவெக எட்டியுள்ளதால், தமிழகத்தில் புதிய அரசியல் சகாப்தம் பிறந்துள்ளது. தன்னிடம் உள்ள பெரும்பான்மை ஆதரவு கடிதங்களுடன் தவெக தலைவர் விஜய், இன்று மாலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோர உள்ளார். பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலை ஆதிக்கம் செலுத்தி வந்த இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக, முதல்முறையாக ஒரு புதிய கட்சி ஆட்சிக் கட்டிலில் அமரப்போவது அரசியல் வரலாற்றில் மிக முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.
