தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிப்பது தொடர்பாக இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டை அறிந்த பின்னரே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னதாக ஆழ்வார்பேட்டையில் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த அவர், அதனைத் தொடர்ந்து சிபிஐ மற்றும் சிபிஎம் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். இந்தச் சந்திப்புகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் முடிவுகளை உணர்ச்சிவசப்பட்டு எடுக்க முடியாது என்றும், இது குறித்து விசிக நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு தனது கட்சியின் அதிகாரப்பூர்வ முடிவை நாளை அறிவிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
