பெத்த மனமே பித்துப்பிடிச்சாலும் இப்படியா…? மகளை சிதைக்கத் துணையாக இருந்த தாய்க்கு 95 வருஷம் ஜெயில்… நீதிமன்றம் அதிரடி…!!

By Devi Ramu on சித்திரை 18, 2026

Spread the love

திருப்பத்தூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், திருச்சியில் தங்கிப் படித்தபோது தனது தாயின் உறவினர் மற்றும் சில கூலித் தொழிலாளர்களால் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தனக்கு நேர்ந்த துயரம் குறித்துத் தாயிடம் முறையிட்டும், அவர் அதனைப் பொருட்படுத்தாமல் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்துள்ளார். மனவேதனையில் இருந்த சிறுமி தனது தோழியிடம் இது குறித்துக் கூற, அவர் குழந்தைகள் நலக் குழுவிற்குத் தகவல் கொடுத்ததன் மூலம் இந்த அதிர்ச்சி விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை போக்சோ நீதிமன்றம், மகளுக்கு நேர்ந்த அநீதியைத் தடுக்கத் தவறிய தாய்க்கு மிக அதிகபட்சமாக 95 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், சிறுமியைச் சீரழித்த அக்பர் அலி, சரவணன் மற்றும் முருகேசன் ஆகியோருக்கு முறையே 50, 20 மற்றும் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.