“நகைக்கடன் வாங்குறீங்களா…?” வட்டியை பாதியாகக் குறைக்கும் கோல்டு ஓவர்ட்ராஃப்ட்… முழு விவரம் இதோ…!!

By Devi Ramu on சித்திரை 18, 2026

Spread the love

அவசர கால பணத்தேவைக்கு நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுபவர்களுக்கு ‘கோல்டு ஓவர்ட்ராஃப்ட்’ சிறந்த மாற்றாக உருவெடுத்துள்ளது. வழக்கமான நகைக்கடனில் மொத்தத் தொகையையும் ஒரே நேரத்தில் பெற்று, அதற்கான வட்டியை முழுமையாகச் செலுத்த வேண்டும். ஆனால், இந்த ஓவர்ட்ராஃப்ட் முறையில் வங்கி ஒரு குறிப்பிட்ட கடன் வரம்பை நிர்ணயிக்கும். அதிலிருந்து நமக்குத் தேவையான பணத்தை மட்டும் அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம். நாம் பயன்படுத்தும் தொகைக்கும், அந்த காலத்திற்கும் மட்டுமே வட்டி கணக்கிடப்படும் என்பதால் தேவையற்ற வட்டிச் சுமையைத் தவிர்க்க முடியும்.

குறிப்பாக வீடு கட்டுபவர்கள் அல்லது அவ்வப்போது சிறு முதலீடு தேவைப்படும் நபர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கடன் வரம்பைப் புதுப்பிப்பது மற்றும் செயலாக்கக் கட்டணம் போன்ற நிபந்தனைகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம் என்பதால், அவற்றைச் சரியாகப் புரிந்துகொண்டு விண்ணப்பிப்பது அவசியம். சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் வட்டி இழப்பைத் தவிர்ப்பதுடன், அடமானம் வைத்துள்ள தங்கத்தையும் பாதுகாப்பாக மீட்க முடியும். நெகிழ்வுத்தன்மை கொண்ட இத்திட்டம் மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.