BREAKING: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது தங்கம்… நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி…!!

By Soundarya on சித்திரை 18, 2026

Spread the love

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று (ஏப். 17) ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ரூ.14,210-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,680-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஏப். 18) கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.14,360-க்கும், சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து ரூ.1,14,880-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கணிசமான ஏற்றத்தைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.