“மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000.. லிஸ்டில் பெயர் இல்லையா?”… அமைச்சர் சொன்ன அந்த ஒரு விஷயம்… விடுபட்டவர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்…!

By Nanthini on சித்திரை 12, 2026

Spread the love

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காட்பாடி தொகுதியில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் துரைமுருகன், விடுபட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை நிச்சயம் வந்து சேரும் என்ற அதிரடி வாக்குறுதியை அளித்துள்ளார். காட்பாடி தொகுதி மக்கள் எதை விரும்புகிறார்களோ அதையே தான் செய்வேன் என்றும், மக்களின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய மாட்டேன் என்றும் உருக்கமாகப் பேசிய அவர், தற்போது சில காரணங்களால் ₹5,000 உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத தாய்மார்களுக்கு, தேர்தல் முடிந்த பிறகு அந்தத் தொகை முறையாகக் கிடைக்கும் என உறுதிபடத் தெரிவித்தார்.

அரசின் நலத்திட்டங்கள் விளிம்பு நிலை மக்கள் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்வதே தனது நோக்கம் என அவர் இந்தப் பிரசாரத்தின் வாயிலாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.