தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் ஏற்கனவே அதிருப்தியில் இருந்த அஜிதா, தற்போது தேர்தல் சீட் மறுக்கப்பட்டதால் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளார். இந்தச் சூழலில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தூத்துக்குடி வருகை தரும் நிலையில், அவர் முன்னிலையில் அஜிதா முறைப்படி திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெகவின் முக்கிய முகமாகப் பார்க்கப்பட்ட அஜிதாவின் இந்தத் திடீர் கட்சித் தாவலுக்குப் பின்னணியில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மிக முக்கியப் பங்காற்றி காய் நகர்த்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் களத்தில் திமுகவின் பலத்தை அதிகரிக்கும் ஒரு நகர்வாகவும் பார்க்கப்படுகிறது.
