அவங்க அமைச்சர்கள் இல்ல கஞ்சா வியாபாரிகள்… திமுக திருடன்களை விரட்டி அடியுங்க… பரபரப்பை கிளப்பிய அன்புமணி..!!

By Soundarya on சித்திரை 10, 2026

Spread the love

முதலமைச்சர் ஸ்டாலினின் செயல்பாடுகளை விமர்சித்த அன்புமணி, “பாஜகவைப் பார்த்தால் ஸ்டாலினுக்கு அவ்வளவு பயமா?” என்று கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் அவர்கள் தூக்கத்தில் கூட பாஜகவை நினைத்து பயப்படுவதாகவும், மத்திய அரசிடம் நிதி கேட்டுப் பெற அவருக்கு துப்பு இல்லை என்றும் மிகக் காரசாரமாகப் பேசினார். ராணிப்பேட்டை சிப்காட்டில் குரோமியக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு மக்களுக்குப் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

மேலும், வெளிமாநிலங்களில் இருந்து டன் கணக்கில் கஞ்சா தமிழகத்திற்குள் கொண்டுவரப்படுவதாகக் குற்றம் சாட்டிய அன்புமணி, ஸ்டாலினைச் சுற்றி இருப்பவர்கள் அமைச்சர்கள் அல்ல, அவர்கள் வெறும் வியாபாரிகள் என்று விமர்சித்தார். “திமுக என்கிற திருடனை ஊராகச் சேர்ந்து விரட்டி அடியுங்கள்” என்று மக்களிடம் ஆவேசமாகப் பேசிய அவர், தமிழகத்தின் எதிர்காலத்தைக் காக்க திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.