தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இன்று அதிரடி சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (ஏப்ரல் 9) ஒரு கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் சவரனுக்கு ரூ.1,600 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுவது நகைப்பிரியர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி நேற்று விற்கப்பட்ட விலையிலிருந்து ரூ.5 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 சரிந்து ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக உச்சத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று ஒரே நாளில் இந்த அளவிற்குச் சரிந்திருப்பது சந்தையில் பெரும் மாற்றமாகக் கருதப்படுகிறது.
