BREAKING: ஈரான் போர்… அதிபர் டிரம்ப் இரவில் பரபரப்பு அறிவிப்பு… அலறும் உலக நாடுகள்…!

By Nanthini on சித்திரை 8, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்பின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான போர் நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கச் சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானுக்கு எதிரான அழிவுகரமான தாக்குதல்களை நிறுத்துமாறு பாகிஸ்தான் முன்வைத்த வேண்டுகோளின் அடிப்படையில், ஈரான் தரப்பு ஹார்முஸ் நீரினையை (Strait of Hormuz) மீண்டும் திறக்க ஒப்புக்கொண்டால், இரண்டு வார காலத்திற்குத் தாக்குதல்களை நிறுத்தி வைக்கத் தான் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருதரப்பு போர் நிறுத்தமானது பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகப் பார்க்கப்படும் அதேவேளையில், சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரினையின் செயல்பாட்டைப் பொறுத்தே இந்த அமைதி ஒப்பந்தம் அமையும் என்பதும் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது.