“நள்ளிரவில் வெடித்த சண்டை”… கழுத்தறுக்கப்பட்ட மனைவி.. விடிய விடிய சடலத்துடன் கணவன்… அதிகாலையில் கதவைத் திறந்த உறவினர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

By Muthu Mani on சித்திரை 5, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் சக்ஸு பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக ராமாவதார் ரைகர் என்ற நபர், தனது மனைவி சுனிதாவை (25) கத்தியால் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். இவர்களுக்குத் திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆன நிலையில், வேலையின்மை மற்றும் வரதட்சணை தொடர்பான விவகாரங்களால் தம்பதியிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த ராமாவதார், மனைவியைக் கொலை செய்ததோடு நில்லாமல், தானும் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இரவு முழுவதும் உயிரிழந்த மனைவியின் சடலத்திற்கு அருகிலேயே அமர்ந்திருந்த ராமாவதாரை, அதிகாலையில் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மீட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர், படுகாயமடைந்திருந்த ராமாவதாரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே, காவல்துறையினர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

   

இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் முகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில், கணவர் ராமாவதார் மற்றும் அவரது பெற்றோர் மீது வரதட்சணைக் கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலையின்மையால் ஏற்பட்ட விரக்தி ஒரு காரணமாகச் சொல்லப்பட்டாலும், வரதட்சணை விவகாரமே இந்தக் கொலைக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்ததாகக் காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.