சமூக வலைதளங்களில் தெற்கு ரயில்வே டிடிஇ ஒருவர் அணிந்திருந்த கடிகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணி ஒருவர், அந்த டிடிஇ அணிந்திருந்த கடிகாரத்தைக் கண்டு வியந்து அதை வீடியோ எடுத்துப் பகிர்ந்துள்ளார்.
இதனால் அந்த கடிகாரம் பார்ப்பதற்கு உலகின் மிக விலையுயர்ந்த மாடல்களில் ஒன்றான ‘ரிச்சர்ட் மில் ஆர்எம் யூபி-01 ஃபெராரி’ போல காட்சியளிக்கிறது. இதன் உண்மையான மதிப்பு சுமார் 15 முதல் 21 கோடி ரூபாய் வரை இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகி இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
“>
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஒரு ரயில்வே ஊழியரால் இவ்வளவு விலையுயர்ந்த கடிகாரத்தை வாங்க முடியுமா என்ற கேள்விகள் எழுந்தன. இருப்பினும், அந்த டிடிஇ-யின் ஸ்டைலான தோற்றம் மற்றும் தங்கக் கடுக்கன் அணிந்திருந்த விதம் பலரையும் கவர்ந்துள்ளது.
மேலும் வீடியோவைப் பகிர்ந்த பயணி பின்னர் விளக்கம் அளிக்கையில், அந்த கடிகாரம் அவரது நண்பர் ஒருவரால் பரிசளிக்கப்பட்டது என்று தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் இது அந்த சொகுசு கடிகாரத்தின் முதல் தர நகலாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வந்தாலும், அந்த டிடிஇ-யின் தனித்துவமான பாணி இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
