கடலுக்குள் ஒரு மரண போராட்டம்… மீனவரின் முகத்தை கவ்விப்பிடித்த ராட்சத அக்டோபஸ்… 25 நொடிகள் மூச்சு திணறிய மீனவர்… வைரலாகும் வீடியோ..!!!

By Rajeshwari on சித்திரை 1, 2026

Spread the love

கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர், ராட்சத அக்டோபஸ் ஒன்றின் தாக்குதலில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பிய அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிறிய படகில் கடலுக்குச் சென்ற அந்த மீனவர், தனது வலையில் ஏதோ பெரிய மீன் சிக்கியிருப்பதாக நினைத்து உற்சாகத்துடன் அதை மேலே இழுத்துள்ளார்.

ஆனால், வலையில் சிக்கியது மீன் அல்ல, ஒரு பெரிய அக்டோபஸ் ஆகும். தன்னை தற்காத்துக் கொள்ள முயன்ற அந்த அக்டோபஸ், மின்னல் வேகத்தில் பாய்ந்து மீனவரின் முகத்தை தனது வலுவான கைகளால் இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. சுமார் 25 வினாடிகள் நீடித்த இந்த மரணப் போராட்டத்தின் போது, அக்டோபஸ் தனது தற்காப்புக்காக மீனவரின் முகம் முழுவதும் கருப்பு மையையும் உமிழ்ந்தது.

   

 

View this post on Instagram

 

A post shared by Daily Brief Global (@dailybriefglobal)

   

“>

 

மேலும் அக்டோபஸின் பிடி மிகவும் வலுவாக இருந்ததால், அதை முகத்தில் இருந்து அகற்றிய பிறகு மீனவரின் தோலில் சிவந்த தழும்புகள் ஏற்பட்டன. இருப்பினும், மிகுந்த துணிச்சலுடன் செயல்பட்ட அந்த மீனவர், ஒருவழியாக அக்டோபஸை முகத்தில் இருந்து பிரித்தெடுத்து மீண்டும் கடலிலேயே விட்டார். இக்கட்டான சூழலிலும் பதற்றமடையாமல் செயல்பட்ட மீனவரின் தைரியத்தை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.