“வீட்டுக்கு ஒரு கிலோ தங்கம்.. ஒரு ஹெலிகாப்டர் தருவேன்” பரபரப்பை கிளப்பும் சீமானின் தேர்தல் வாக்குறுதி…!!

By Soundarya on சித்திரை 1, 2026

Spread the love

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் “வீட்டுக்கு ஒரு கிலோ தங்கம் மற்றும் ஹெலிகாப்டர் தருவேன்” என்று கூறி அதிரடி கிளப்பியுள்ளார். மற்ற கட்சிகள் ரூ. 2,000, ரூ. 3,000 எனப் பணம் கொடுப்பதாகக் கூறுவதைப் போலத் தானும் இதைக் கூறுவதாக அவர் கிண்டலாகத் தெரிவித்துள்ளார். “நான் சொல்வதைக் கேட்பதற்குத் தேனாக இனிக்கும்” என வேடிக்கையாகப் பேசிய அவர், தேர்தல் வாக்குறுதிகளின் நடைமுறைச் சாத்தியங்கள் குறித்து விமர்சித்துள்ளார்.

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், சீமானின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இதையெல்லாம் எப்படித் தர முடியும் என்று யாரும் தன்னிடம் கேள்வி கேட்க முடியாது என்றும் அவர் தனது பேச்சில் அழுத்திச் சொல்லியுள்ளார். மற்ற கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளைக் கேலி செய்யும் விதமாகவே அவர் இவ்வாறு பேசியதாகப் பார்க்கப்படுகிறது.