பாமக கௌரவத் தலைவரும், முன்னாள் தலைவருமான ஜி.கே.மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்க்குுமரன், பாமகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாமக இளைஞரணித் தலைவராக அவர் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த அரசியல் மாற்றத்தை மேற்கொண்டுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நிலவி வரும் உட்கட்சிப் பூசல் மற்றும் மோதல் போக்குகளே தமிழ்க்குுமரனின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. முன்னதாக, ராமதாஸ் இவரை இளைஞரணித் தலைவராக நியமித்தபோது அன்புமணி எதிர்ப்புத் தெரிவித்ததும், பின்னர் அன்புமணி ஆதரவாளர்களால் ஜி.கே.மணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
