1 வருட ரகசியம் அம்பலம்…! காதலனுடன் சேர்ந்து தாயைத் தீர்த்துக்கட்டிய மகள்…. தோண்ட தோண்ட வந்த எலும்புக்கூடு… பகீர் பின்னணி…!!

By Devi Ramu on பங்குனி 28, 2026

Spread the love

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் அருகே உள்ள ஜவஹர் நகர் பகுதியில், மனிதநேயமற்ற ஒரு கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அஞ்சு என்ற பெண், கடினமாக உழைத்துத் தனது இரு மகள்களை வளர்த்து வந்தார். இந்நிலையில், அவரது இரண்டாவது மகள் இஷிகா, மவுன்டியராஜ் என்பவரைக் காதலித்துள்ளார்.

தாயின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, இஷிகா தனது காதலனுடன் இணைந்து கடந்த ஆண்டு மே மாதம் அஞ்சுவைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கொலையை மறைக்கத் திட்டமிட்ட இருவரும், தாங்கள் தூங்கும் அதே படுக்கையறையில் கட்டிலுக்கு அடியில் ஒரு பெரிய பள்ளத்தைத் தோண்டி, அஞ்சுவின் உடலைப் புதைத்து மூடியுள்ளனர்.

   

இதில் உச்சக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால், தனது தாயின் சடலம் புதைக்கப்பட்ட அதே இடத்தின் மேல் கட்டில் போட்டு, கடந்த ஓராண்டாக எதற்கும் அஞ்சாமல் இஷிகா தூங்கி வந்துள்ளார். தனது தாய் காணாமல் போனது போல் நாடகமாடிய இஷிகாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்குச் சந்தேகம் ஏற்படவே, அவரைப் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தினர்.

   

அப்போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டதை அடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டின் தரை தோண்டப்பட்டு அழுகிய நிலையில் அஞ்சுவின் உடல் மீட்கப்பட்டது. தற்போது கொடூர மகள் இஷிகா மற்றும் அவரது காதலனைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.